நம் பெருமைமிகு கோவை மாநகரின் ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வடிவமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் மக்களுக்கான நகரத்தை உருவாக்குவதற்கான ஓர் அறிய வாய்ப்பே இந்த ” Co(Vai)-Design (அனைவருக்குமான நகர்ப்புற வடிவமைப்புப் போட்டி)”. இதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த, கோவை மாநகராட்சி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை உலக அளவில் செயல்படுத்தி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறது.
கோ(வை)- அனைவருக்குமான நகர்ப்புற வடிவமைப்பு போட்டி என்பது நம் தேசிய அளவிலான வெவ்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத்துறைகளைச் சேர்ந்த நகர்ப்புற வடிவமைப்பு, நகர்ப்புற திட்டமிடல், கட்டிடக்கலை, சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த நிபுணர்கள் அனைவரும் இணைந்து போட்டியிடுவதற்கான ஓர் மேடை. இதுமட்டுமின்றி, கோவை மாநகரின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த குடிமை திட்டங்களை செயல்படுத்துவதில் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் கூட்டாக வடிவமைத்து வசதி செய்வதயே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த போட்டிக்கான திட்டங்களின் தொடர்ச்சியாகவே, கோவை மாநகரின் கவுண்டம்பாளையம் பகுதி தேர்வுசெய்யப்பட்டது. இதில், தேர்ந்தேடுக்கப்பட்ட பகுதியை (Urban Design Competition (UDC) Area) ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டங்களின் மூலம், இங்குள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இதனை சிற்றியுள்ள மற்ற நகர்ப்புற பகுதிகளும் பயன்பெறும் நோக்கத்தோடு அவரவர் வளர்ச்சித் திட்டங்கள் இருக்க வேண்டுமென இந்த போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இது ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுவதற்கான வழிகளை கோவை மாநகராட்சி மற்றும் GIZ ஆராய்ந்து வருகிறது. இதில் பல்வேறு நகர வளர்ச்சிக்கான பங்குதாரர்களை இணைத்தல், உள்ளூர் சூழல், வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வது மற்றும் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப, சமூக-நிலை மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் குறை-நிறைகளை சமநிலைப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதன்மூலம், வெற்றிபெறும் அணிகளின் திட்டங்கள் மற்றும் அவற்றின் அமல்படுத்தும் திறனை அதிகரிக்கும் அதே வேளையில், நிலையான நகர்ப்புற மேம்பாட்டுக்கான சிறந்த நடைமுறை மாதிரியாக இது கருதப்படுகிறது.
கோ(வை)- அனைவருக்குமான நகர்ப்புற வடிவமைப்பு போட்டி என்பது சூழல் ரீதியாக உணர்திறன் மற்றும் நிலையான முறையில் இடத்தை புத்துயிர் அளிக்கும் விதமாக, காலநிலைகளுக்கேற்ப மற்றும் ஒருங்கிணைந்த வடிவமைப்பு தலையீடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழு UDC பகுதிக்கான முதன்மைத் திட்டத்தைத் (Master Plan) தவிர, கூறப்பட்ட ஐந்து உட்பகுதிகளில் ஏதேனும் இரண்டிற்கும் மேற்பட்ட (min 2 out of 5 identified Sub sites) முக்கிய உட்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பு அணுகுமுறைகள் அடையாளம் காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், இது அந்த பகுதியையே புதுப்பிக்கும் விதமாக அமையும்.